×

2019-ம் ஆண்டுக்கான நாட்டின் சிறந்த காவல் நிலையங்கள் பட்டியல் வெளியீடு: 4-ம் இடத்தில் தமிழ்நாடு தேனி மகளிர் காவல் நிலையம்

டெல்லி: இந்தியாவின் தலைசிறந்த 10 காவல் நிலையங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 2016ம் ஆண்டு முதல் நாட்டின் தலை சிறந்த 10 காவல் நிலையங்களை தேர்வு செய்து மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. குற்றங்களை கண்டறிதல், குற்ற தடுப்பு நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கை பாதுகாத்தல், விபத்துக்களை குறைத்தல், விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், போலீஸ் சமுதாய பணிகள், கணினி மூலம் பராமரிக்கப்படும் குற்றப்பதிவேடுகள், போலீஸ் நிலையத்தில் பொதுமக்களை வரவேற்கும் முறைகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது.

கடந்த 2017ல் 10 போலீஸ் நிலையங்கள் சிறந்த போலீஸ் நிலையங்களாக தேர்வு செய்யப்பட்டன. கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையம் நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு விருதை பெற்றது. அதே போல 2018ம் ஆண்டு 8-வது சிறந்த காவல் நிலையமாக தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 2019-ல் தமிழ்நாடு தேனி மகளிர் காவல் நிலையம் 4-வது இடத்தில் உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை;

1. அந்தமான் அபர்தீன் காவல்நிலையம் முதலிடத்தில் உள்ளது.
2. குஜராத் மாநிலம் மகிசாகர் பாலசினார் காவல் நிலையம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
3. மத்திய பிரதேசத்தின் புர்ஹான்பூர் காவல் நிலையம் 3-வது இடத்தில் உள்ளது.
4. தமிழ்நாடு தேனி மகளிர் காவல் நிலையம் 4-வது இடத்தில் உள்ளது.
5. அருணாச்சல பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கு அனிணி காவல் நிலையம் 5-வது இடத்தில் உள்ளது.
6. டெல்லி தென் மேற்கு மாவட்டத்தின் பாபா ஹரிதாஸ் நகர், துவாரகா காவல் நிலையம் 6-வது இடத்தில் உள்ளது.
7. ராஜஸ்தானில் ஜலவார் மாவட்ட பகானி காவல் நிலையம் 7-வது இடத்தில் உள்ளது.
8. தெலுங்கானாவின் கரீம்நகர் சோப்பதண்டி காவல் நிலையம் 8-வது இடத்தில் உள்ளது.
9. கோவாவில் உள்ள பிச்சோலிம் காவல் நிலையம் 9-வது இடத்தில் உள்ளது.
10. மத்திய பிரதேசத்தின் சியோபூர் பர்காவா காவல் நிலையம் 10-வது இடத்திலும் உள்ளது.


Tags : Top 10 ,Police Stations ,Country ,Country 2019 ,Top Police Stations ,Tamil Nadu , Best Police Station, Tamilnadu, Theni Women Police Station
× RELATED இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட...