×

மகா தேரோட்டத்தின்போது பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த குவிந்துள்ள கரும்புகள்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவில் நாளை நடக்கும் பஞ்சமூர்த்திகள் மகா தேரோட்டத்தின்போது, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு ஏதுவாக கரும்புகள் விற்பனைக்கு குவிந்துள்ளன. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 5ம் நாளான நேற்று இரவு பெரிய ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் மாடவீதியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து அண்ணாமலையாரை வழிபட்டனர்.

 இந்நிலையில், 7ம் நாளான நாளை(சனி) பஞ்சமூர்த்திகள் மகா தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த தேரோட்டத்தின்போது வேண்டுதல் நிமித்தம் குழந்தை வரம் பெற்றவர்கள், கரும்பு தொட்டிலில் தங்களது குழந்ைதயை அமர வைத்து ஏந்தி செல்வார்கள். இதற்கு ஏதுவாக சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு கரும்புகள் வந்து குவிந்துள்ளன. ஒரு கட்டு கரும்பு ₹400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : pilgrims ,temple ,Devotees ,Tiruvannamalai Deepa thiruvilla , Tiruvannamalai ,Deepa thiruvilla ,Chariot Function,Annamalaiyar Temple,Devotees ,Sugarcane
× RELATED மானாமதுரையில் சோமநாதர் கோயில் தேரோட்டம்