×

தனது மகள் தூக்கிட்டதாக கூறப்படும் கயிறு எங்கே?: பாத்திமாவின் தந்தை கேள்வி

சென்னை: தனது மகள் தூக்கிட்டதாக கூறப்படும் கயிறு எங்கே என பாத்திமாவின் தந்தை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் பாத்திமாவின் தந்தை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்தியா முழுவதும் ஐ.ஐ.டி.களில் நடந்த தற்கொலை பற்றி விசாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மகள் பாத்திமா தற்கொலை பற்றி போலீஸ் அதிகாரி ஈஸ்வரமூர்த்தி விசாரித்து வருகிறார். மேலும் பாத்திமா மரணம் தொடர்பாக பல ஆதாரங்களை கோட்டூர்புரம் போலீஸ் அழித்து விட்டது. தற்கொலை செய்துகொண்ட பாத்திமா கண்டிப்பாக கடிதம் எழுதி வைத்திருப்பார். பாத்திமா செல்போன், லேப்டாப்பை போலீஸ் ஆய்வுசெய்யவில்லை. இதையடுத்து, கயிறு மின்விசிறியில் கட்டப்பட்டு இருக்கவில்லை. எனவே தனது மகள் தூக்கிட்டதாக கூறப்படும் கயிறு எங்கே எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.


Tags : Fatima , Daughter, hanged, rope, where, Fatima's father, questioned
× RELATED 1500 பணத்துக்காக ஆபாசமாக பேட்டி அளித்த...