×

நிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும்..: குடியரசுத் தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை

புதுடெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா, ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான 5 பேரில் ஒருவன் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் தாகூர், முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களின் தண்டனை நிறைவேற்றும் காலம் நெருங்கி உள்ளது. இந்த 4 குற்றவாளிகளில் வினய் சர்மா மட்டும் கருணை மனு தாக்கல் செய்துள்ளான். இதனால், 4 பேரின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது தள்ளிப்போய் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், டெல்லி அரசின் பரிந்துரையை ஏற்ற அம்மாநில துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரித்து, மத்திய உள்துறை அமைச்சகமும் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என பரிந்துரைத்தார். இந்நிலையில், இந்த கருணை மனுவினை உள்துறை அமைச்சகமானது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

ஆனால், அதனை நிராகரிக்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, இதுதொடர்பான இறுதி முடிவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகுறது. இதற்கிடையில், குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரிக்குமாறு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நிர்பயாவின் பெற்றோர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இந்த கருணை மனு மரண தண்டனையை நிறைவேற்றுவதைத் தவிர்ப்பதற்கும், நீதி பரவுவதைத் தடுப்பதற்கும் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சி, என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Tags : Home Ministry ,President , Nirbhaya case, mercy petition, President,Home Ministry
× RELATED அசாம் உள்ளிட்ட நாட்டின் பிற...