ஹைதராபாத் என்கவுண்டர் சம்பவம் உண்மைதானா என முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்: ப.சிதம்பரம்

டெல்லி: ஹைதராபாத் என்கவுண்டர் சம்பவம் உண்மைதானா என விசாரணை நடத்தப்பட வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற 4 பேர் இன்று அதிகாலை என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். கடந்த 27ம் தேதி கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். கால்நடை பெண் மருத்துவரை எரித்துக்கொன்றது தொடர்பாக கேசவலு, முகமது பாஷா, நவீன், சிவா ஆகிய 4 பேரை ஐதராபாத் காவல்துறை கைது செய்தது. விசாரணையின் அடிப்படையில் அவர்கள் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 4 பேரையும் அழைத்துச் சென்று, எப்படி கொலை செய்தனர் என போலீசார் செய்து காட்டச் சொல்லியுள்ளனர். அப்போது 4 பேரும் தப்பித்து ஓட முயன்றதால் 4 பேரையும் காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.

மருத்துவரை எரித்துக்கொன்ற இடத்திலேயே இந்த என்கவுன்ட்டர் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் பெரும் மகிழ்ச்சி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. என்கவுண்டர் செய்தது தான் சரி என்று மக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் தெலுங்கானா காவல்துறை அதிகாரிகளுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், இந்த விவாகரம் தொடர்பாக அரசியல் கட்சியினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில், காங்கிரசின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது, ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் உண்மைதானா என்பதை விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு பெண்ணின் பெற்றோரும் காவல்துறையினரும் பெரும் வரவேற்பை கொடுத்து வருகின்றனர். ஆனால், போலீஸ் நடவடிக்கை குறித்த விவரங்கள் தனக்குத் தெரியாது என அவர் கூறினார். ஒரு பொறுப்புள்ள நபராக யோசித்து பார்த்தால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பி ஓட முயற்சித்தார்களா? உண்மையாகவே என்கவுண்டர் நடந்ததா? என்பது முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories: