ஹைதராபாத்தில் 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து காவல் ஆணையர் சஞ்சனார் விளக்கம்

ஹைதராபாத்: நவம்பர் 27ம் தேதி இரவு பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். அறிவியல் முறைப்படி புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக ஐதராபாத் காவல் ஆணையர் சஞ்சனார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மருத்துவர் பலாத்கார வழக்கு தொடர்பாக 4 பேரை கைது செய்தோம். கைது செய்யப்பட்ட 4 பேரும் டிசம்பர் 30ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற காவலில் இருந்த போது 4 பேரை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வந்தோம். 4 வது நாள் சொர்ணப்பள்ளி சிறையில் இருந்து பலாத்காரம் நடந்த இடத்துக்கு 4 பேரையும் அழைத்து சென்றோம். 4 பேரிடமும் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து 4 பேரும் ஒன்றாக சேர்ந்து காவலர்களை தாக்கினர். போலீசாரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து ஒருவர் சுட்டார். தற்காப்புக்காக போலீஸ் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேரும் உயிரிழந்தனர். கைதிகள் தாக்கியதில் 2 காவலர்கள் காயமடைந்தனர். குற்றவாளிகள் 4 பேரும் தெலுங்கானா - ஆந்திரா எல்லையில் மேலும் பல குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து காலை 5.45 மணியில் இருந்து 6.15க்குள் என்கவுன்டர் நடைபெற்றதாக ஆணையர் விளக்கமளித்தார். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனையும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: