இலங்கை அகதிகளுக்கு கடனுதவி செய்வதாக கூறி அரசு பணத்தை மோசடி செய்த வழக்கு: வட்டாட்சியர் உள்பட 4 பேருக்கு 4 ஆண்டு சிறை

கடலூர்: ரூபாய் 50.88 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் வட்டாட்சியர் உள்பட 4 பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திட்டக்குடி முன்னாள் வட்டாட்சியர் வீரசெல்லையா, துணை வட்டாட்சியர்கள் பிச்சைபிள்ளை, கோவில்பிள்ளை மற்றும் 2 பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அகதிகளுக்கு கடனுதவி, வீடுகள் கட்டி தருவதாக கூறி ரூ. 50.88 லட்சம் மோசடி செய்த வழக்கில் கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொய்யான விவரங்கள், போலியான ஆவணங்கள் அளித்து அரசு பணத்தை மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

Related Stories:

>