தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகப்பட்டினம், சிவகங்கை, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 8 செ.மீ. மழையும், தங்கச்சிமடத்தில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மணிக்கு 40-50 கி.மீ. வேகத்துக்கு சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் குமரிக்கடல் மற்றும் மாலத்தீவுப் பகுதிகளில் இன்று மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: