×

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை

டெல்லி: 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 9 மாவட்டங்கள் தவிர எஞ்சிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. எஞ்சிய மாவட்டங்களில் தேர்தல் நடத்துவது தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வார்டு வரையறைகளை முடித்த பின் 9 மாவட்டங்களில் 4 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : elections ,Supreme Court ,districts , 9 Districts, Local Elections, Supreme Court Prohibition
× RELATED தேர்தலில் மின்னனு வாக்குப்பதிவு...