கிண்டி ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியரை கடத்த முயன்ற 3 போலி பெண் போலீசுக்கு வலை

சென்னை: சென்னை வேளச்சேரி வெங்கடேஷ் வராநகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி சுபாஷினி (42). மாம்பலம் ரயில்நிலைய கிளார்க். நேற்று காலை தனது கணவருடன் பைக்கில் வந்தவர் கிண்டி ரயில் நிலையம் அருகே  இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த 35 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் மற்றும் முகமூடி அணிந்திருந்த ஒரு பெண்ணும் உங்களை இன்ஸ்பெக்டர் அழைத்து வர சொன்னார், வாருங்கள் என்று வலுக்கட்டாயமாக இழுத்துள்ளனர். உடனே சுபாஷினி தனது கணவருக்கு போன் செய்யமுயன்ற போது போனை தட்டிவிட்டுள்ளனர். சுதாகரித்து கொண்ட சுபாஷினி ஒடிச்சென்று ரயில்வே  அலுவலகத்தில் நுழைந்தபோது அந்த 2 பேரும் சுபாஷினியை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முயன்றனர். இந்த காட்சிகளை பார்த்த பொதுமக்களும் ரயில்வே போலீசாரும் ஒடிவருவதை பார்த்த முகமூடி அணிந்த பெண் ஓடி விட்டார். ஆனால் அவருடன் வந்த ஆண் நபர் போலீசாரிடம் சிக்கி கொண்டார்அவரிடம் நடத்திய விசாரணையில், ‘‘தன் பெயர் ஜீவானந்தம் என்றும் சொந்தமாக கார் ஒட்டிவருவதாகவும் தெரிவித்தார்.

Advertising
Advertising

மேலும் நேற்று காலை பெரம்பூரை சேர்ந்த பாலகுரு என்பவர் அனுப்பியதால் பெரம்பூரில் பெண் இன்ஸ்பெக்டர்  உடையில் ஒரு பெண்ணும் கைவிலங்குடன் 45 வயதுடைய இன்னொரு பெண்ணை காரில் ஏற்றிக்கொண்டு வில்லிவாக்கம் சென்றதாகவும் அங்கு 40 வயதுடைய மேலும் ஒரு பெண்ணை ஏற்றிக்கொண்டு கிண்டி ரயில்நிலையம் வந்தோம் என்று தெரிவித்தார்.  அப்போது அந்த பெண் இன்ஸ்பெக்டர் இங்கு ஒரு திருடி ஒருவரை பிடிக்க வேண்டும் எனக் கூறிய என்னையும் முகமூடி அணிந்த பெண்ணையும் அனுப்பி வைத்தார். இதன்பிறகு நடந்து சென்ற பெண்ணை திருடி என்று சொன்னதால் பிடிக்க முயன்றபோது சிக்கியதாகவும். இவர்கள் பெண் போலீஸ் தானா என்பது கூட தனக்கு தெரியாது என கூறினார். இவர் கொடுத்த தகவலின்பேரில் பாலகுருவையும் ரயில்வேபோலீசார் கைது செய்தனர்.  பின்னர் இந்த வழக்கினை கிண்டி குற்றபிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பெண்ணை கடத்த முயன்ற 3 போலி பெண் போலீசாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: