சிறுமி பலாத்காரம் போலீஸ்காரருக்கு 5 ஆண்டு கடுங்காவல்

சாயல்குடி : ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் காவலர் குடியிருப்பில் வசித்த ஒரு போலீஸ்காரருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த 2018, ஜன.23ம் தேதி போலீஸ்காரர் மனைவியுடன் வெளியூர் சென்றிருந்தார். வீட்டில் 2 சிறுமிகளும் இருந்தனர். அப்போது அதே குடியிருப்பில் வசிக்கும் போலீஸ் சரவணன், மூத்த பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பெற்றோர் திரும்பி வந்ததும் சிறுமி இதுகுறித்து தெரிவித்தாள்.  இதுகுறித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து சரவணனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எஸ்பி உத்தரவின்பேரில் சரவணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  இந்த வழக்கு ராமநாதபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி பகவதி அம்மாள், ேநற்று அளித்த தீர்ப்பில், குற்றவாளியான போலீஸ் சரவணனுக்கு, 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.9 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.Tags : child molestation policeman , The little girl is a rapist, a policeman, a hard worker
× RELATED தொழிலாளி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை