தருமபுர ஆதீனம் உடல் அடக்கம்

மயிலாடுதுறை: நாகை மாவட்டத்தில் பழமைவாய்ந்த தருமபுர ஆதீனத்தின் 26வது சன்னிதானம் ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் (93) உடல்நலக்குறைவால் நேற்றுமுன்தினம் காலமானார். அவரது உடல் மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தில் வைக்கப்பட்டிருந்து.  நேற்று மாலை 4 மணிக்கு அவரது இறுதி சடங்கு  நடைபெற்றது. அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சன்னிதானத்தில் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மேலகுருமூர்த்தம் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் மதுரை ஆதீனம்   அருணகிரிநாத சுவாமிகள், செங்கோல் ஆதீனம் சிவபிரகாசம், ரத்தினகிரி ஆதீனம் பாலமுருகன் அடியார் சுவாமிகள் உள்பட 15 ஆதீனங்கள் கலந்து கொண்டனர்.  முதல்வர் இரங்கல்: ஆதீனம் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தருமபுரம் ஆதீனத்தின் 26வது குருமணியாக அருளாட்சி புரிந்த ல சண்முக தேசிக ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள் 4.12.2019 அன்று பரிபூரண நிலையை அடைந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரை இழந்து வாடும் சிஷ்ய கோடிகளுக்கும், ஆன்மிக அன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: