கொல்லிமலை அருகே முட்புதரில் வீசப்பட்ட 35 துப்பாக்கிகள் பறிமுதல்

சேந்தமங்கலம்: கொல்லிமலை அருகே, முட்புதரில் கேட்பாரற்று கிடந்த 35 கள்ளத்துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.  நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் சிலர் அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்துக்கொண்டு, வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக, மாவட்ட எஸ்பி அருளரசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், கொல்லிமலையில் அதிகளவில் உரிமம் இல்லாத கள்ள துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. கள்ளத்துப்பாக்கி வைத்திருயிருப்பவர்கள், தாமாக முன் வந்து காவல்நிலையத்தில் துப்பாக்கியை ஒப்படைத்துவிட்டால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. மேலும் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என தெரிவித்திருந்தார்.

Advertising
Advertising

இந்த நிலையில், கொல்லிமலை அரியூர்நாடு சோளக்காடு பகுதியில், இன்ஸ்பெக்டர் தீபா, எஸ்ஐ மணி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சோளக்காடு மயானத்தின் அருகிலுள்ள முட்புதரில், உரிமம் இல்லாத 35 கள்ளத்துப்பாக்கிகள் கேட்பாரற்று கிடந்தன. போலீசாருக்கு பயந்து மர்மநபர்கள் அதை வீசி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து வாழவந்திநாடு போலீசார், துப்பாக்கிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: