ரசாயனம் பயன்படுத்தியதால் கரூரில் கொசுவலை நிறுவனம் உற்பத்தியை நிறுத்த உத்தரவு: வேளாண்துறை நடவடிக்கை

கரூர்: ரசாயனம் கலந்த கொசுவலை தயாரித்த  நிறுவனத்தின்  உற்பத்தியை நிறுத்த வேளாண்மைதுறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கரூரை சேர்ந்த சிவசாமி என்பவர் ‘ஷோபிகா இம்பெக்ஸ்’ என்ற கொசுவலை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.   இந்த தொழிற்சாலைகளில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர் இங்கு தயாரிக்கப்படும் கொசுவலை பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தநிலையில், கரூரில் ரசாயன கொசுவலை உற்பத்தியை நிறுத்த இரண்டு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேளாண்மைத்துறை உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   கரூரில் ரசாயன கொசுவலையை  தடையை மீறி உற்பத்தி செய்வதாக புகார் எழுந்தது.

Advertising
Advertising

மேலும் இவ்வகை கொசு வலைகளை இந்தியாவில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி இங்கு உற்பத்தி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கொசுவலை உற்பத்தியாளர்கள் சென்னை வேளாண்மைத்துறை இயக்குநரிடம் முறையிட்டனர். அவரது உத்தரவின்பேரில் ஆய்வு செய்ததில் ரசாயன கொசுவலை தடை மீறி தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனடிப்படையில் கரூரில் உள்ள 2 ரசாயன கொசுவலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு மாதத்திற்கு உற்பத்தியை நிறுத்த வேண்டும் என கரூர் வேளாண்மை துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories: