ஆழ்கடலில் 250 மீனவர்கள் தத்தளிப்பு

நாகர்கோவில்:  அரபிக்கடலில் பலத்த சூறைக்காற்று வீசிய நிலையில் 30க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சிக்கின. அவற்றில் 22 படகுகளில் இருந்த 200 மீனவர்கள் அந்த வழியாக வந்த ஆறு கப்பல்களில் தஞ்சமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். நேற்று காலை நிலவரப்படி மூன்று விசைப்படகுகளில் இருந்த மொத்தம் 36 பேர் கோவா கொண்டு செல்லப்பட்டனர். இதர மீனவர்களையும் மீட்டுவர கடலோர காவல்படையின் கப்பல்கள் சென்றுள்ளன. 264 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  மேலும் 250 மீனவர்கள் ஆழ்கடலில் விசைப்படகுகளுடன் தத்தளிப்பதாகவும், அவர்களை மீட்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதையடுத்து, கடலோர காவல்படையினர் டார்னியர் விமானம் மூலம் மங்களூர், லட்சத்தீவு பகுதியில் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: