×

சூடான் தீ விபத்தில் இந்தியர்கள் பலி அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: சூடான் தீ விபத்தில் 18 இந்தியர்கள் பலியானதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: சூடான் நாட்டு செராமிக் தொழிற்சாலை தீ விபத்தில் தமிழர்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக வருகிற தகவல்கள் மனதுக்கு மிகவும் வேதனையை தருகிறது. இந்திய தூதரகம் விரைந்து செயல்பட்டு, தீ விபத்தில் சிக்கி உள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கவும், இறந்தவர்களின் உடல்களை மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்   பாமக நிறுவனர் ராமதாஸ்:  தீ விபத்தில் தமிழர்கள் உள்ளிட்ட 23 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்த செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். இறந்த 23 ஊழியர்களில் 18 பேர் இந்தியர்கள். அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், தீ விபத்துக்கு காரணமான சலூமி செராமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து குறைந்தபட்சம் தலா ₹2 கோடி வீதம் இழப்பீடு பெற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் உள்பட இந்தியர்கள் அனைவரின் குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய அரசு உயிரிழந்த இந்தியர்களை அவர்களின் குடும்பத்திடம் ஒப்படைக்கவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் சூடான் அரசுடன் தொடர்பில் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இந்தியாவை சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க முன்வர வேண்டும்.


Tags : Indians ,fire ,party ,Sudan ,leaders , Sudan fire, Indians killed, political party condolences
× RELATED அமெரிக்காவில் இரும்புப் பாலத்தின்...