ப.சிதம்பரத்தை வரவேற்க திரள வேண்டும்: கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை: சென்னைக்கு வரும் ப.சிதம்பரத்தை வரவேற்க காங்கிரசார் திரள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். பாஜ அரசின் பழிவாங்கும் போக்கு காரணமாக, பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு 106 நாட்கள் சிறையில் இருந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீனில் விடுதலை பெற்றிருக்கிறார். வரும் 7ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வருகிறார். அவருக்கு உற்சாகம், புத்துணர்ச்சி வழங்கும் வகையில் காங்கிரசார் திரளாக வந்து வரவேற்பு அளிக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : P Chidambaram KS Alagiri ,P Chidambaram , P. Chidambaram, K.S.Alagiri
× RELATED காஷ்மீரில் 70 லட்சம் மக்களின்...