கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளை முன்மாதிரி கிராமமாக தேர்வு: தயாநிதி மாறன் எம்பி அறிவிப்பு

சென்னை: கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையை முன்மாதிரி கிராமமாக தேர்வு செய்துள்ளதாக எம்பி தயாநிதி மாறன் கூறியுள்ளார். இது குறித்து மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய சென்னை மக்களவை உறுப்பினராக 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் கிராம பஞ்சாயத்துக்கள், கிராம வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்திட அடிப்படை வசதிகளற்ற கிராமங்களை தேர்வு செய்து தன்னிறைவு பெற வசதியாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவினை போற்றிடும் வகையில், அவர் பிறந்திட்ட மண்ணான நாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளை எனும் பின் தங்கிய கிராமத்தை 2019-24ம் ஆண்டிற்கான முன்மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த அரிய வாய்ப்பை எனக்களித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Birthplace ,Artist ,Model Village ,Dayanidhi Maran Thirukkuvil , Artist Birth Ur, Tirukkuval, Dayanidhi Maran MB
× RELATED தமிழினத்திற்காக, தமிழ் மொழிக்காக...