×

ஷூவில் மறைந்திருந்த பாம்பு கடித்து பெண் பலி: அரசு மருத்துவமனையில் மருந்து இல்லாததால் பரிதாபம்

சென்னை: சென்னை கே.கே.நகர் கன்னிகாபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் பழனி (39). இவர் மனைவி சுமித்ரா (35) மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக சென்னை முழுவதும் கன மழை செய்தது. இதனால் வீடு முழுவதும் சகதியாக இருந்ததால் அதை கடந்த செவ்வாய்கிழமை இரவு 11.30 மணிக்கு சுமித்ரா சுத்தம் செய்துள்ளார்.  அப்போது, வீட்டின் கழிவறை அருகே கிடந்த ஷூவை எடுத்து வைக்கும் போது, அதில் இருந்த நச்சு பாம்பு ஒன்று சுமித்ராவை கடித்துவிட்டது. உடனே சுமித்ராவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நச்சு பாம்பு என்பதால் உடல் முழுவதும் விஷம் பரவியதால் மேல் சிகிச்சைக்காக மருத்துவர்களின் பரிந்துரைப்படி உடனே ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சுமித்ரா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை ெபற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.. பாம்பு கடிக்கு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து இல்லாததே பெண் இறப்புக்கு காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.Tags : government hospital ,snake bite victim , Snake, female victim, government hospital, drug
× RELATED புல் அறுத்தபோது பாம்பு கடித்த பெண் பலி