×

ப.சிதம்பரத்திடம் தொலைபேசியில் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு

சென்னை: நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 106 நாட்களுக்கு பிறகு ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் இருந்து நேற்று முன்தினம் மாலை விடுதலை செய்யப்பட்டார்.  இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ப.சிதம்பரத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தார்.


Tags : MK Stalin , P. Chidambaram, Telephone, MK Stalin
× RELATED உலக சாதனை படைத்த சிறுமி மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு