கார்த்திகை தீப திருவிழாவுக்கு 2615 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: தமிழக போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கை:  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருநாள் 10ம் தேதி பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு 9ம் தேதி திங்கள் முதல் 12ம் தேதி வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னையிலிருந்து சுமார் 500 சிறப்பு பேருந்துகள் மற்றும் தாம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ஆரணி, ஆற்காடு போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து 1112 சிறப்பு பேருந்துகள் மூலம் 5020 நடைகள் வசதிக்காக இயக்கப்படுகிறது.

கும்பகோணம், திருச்சி பகுதிகளிலிருந்து 450 சிறப்பு பேருந்துகளும், சேலம் சார்பாக பெங்களூர், தர்மபுரி, ஓசூர் பகுதியிலிருந்து 251 சிறப்பு பேருந்துகளும், கோவை, மதுரை, நெல்லை .தூத்துக்குடி பகுதியிலிருந்து 80 சிறப்பு பேருந்துகள் என 2615 சிறப்பு பேருந்துகள் மூலம் 6500 நடைகள் இயக்கப்பட உள்ளன.

Related Stories: