டிரம்ப் பதவி நீக்க தீர்மானத்துக்கு நாடாளுமன்ற குழு ஒப்புதல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றக் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட அதிபர் டிரம்ப் முடிவு செய்து, அதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதேபோல், ஜனநாயகக் கட்சியின் சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிடும் நடவடிக்கையில் இறங்கி உள்ளார்.இந்நிலையில், தனக்கு எதிராக வருவார் என்று எதிர்பார்க்கப்படும் ஜோ பிடெனுக்கு எதிராக, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உக்ரைன் அதிபரை மிரட்டியதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் அதிபர் டிரம்ப் மீது கண்டன தீர்மானம் கொண்டு வந்தன.

இதை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது தொடர்பான நடைமுறையாக நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதன் விசாரணை தொடர்ந்து, சபாநாயகரிடம் அறிக்கையை அளித்தது. இதையடுத்து, பதவி நீக்க தீர்மானத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி இதற்கான அனுமதியை வழங்கி உள்ளார்.இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப், ‘‘எனக்கு எதிரான தீர்மானத்தை செனட் சபையில் எதிர்கொள்வேன்’’ என்று கூறினார்.

Related Stories:

>