கர்நாடக இடைத்தேர்தலில் 66 சதவீதம் வாக்குப்பதிவு: 9ம் தேதி வாக்கு எண்ணிக்கை

பெங்களூரு: கர்நாடகாவில் 15 சட்டப்பேரவை தொகுதிகளில் நடந்த  இடைத்தேர்தலில் 66 சதவீதம் வாக்குகள் பதிவாகின.கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சி நடந்தது. இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியை சேர்ந்த 17  எம்எல்ஏக்கள் பாஜ ஆட்சி அமைய ஏதுவாக தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.  இதையடுத்து கூட்டணி ஆட்சி  கவிழ்ந்து பி.எஸ்.எடியூரப்பா தலைமையில் பாஜ அரசு மாநிலத்தில் பதவியேற்றது. இதனிடையில்  எம்எல்ஏகள் ராஜினாமாவால் காலியாகவுள்ள 17 தொகுதிகளில் ராஜராஜேஸ்வரிநகர்  மற்றும் மஸ்கி ஆகிய இரு தொகுதிகள் தவிர மற்ற 15 தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது.காலை முதலே வாக்காளர்கள் உற்சாகமாக வந்து  தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். சில இடங்களில் தேர்தலை  புறக்கணித்தனர், சில இடங்களில் வாக்காளர் பட்டியலில்  பெயர் இ்ல்லாதவர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நடந்த 15 தொகுதியிலும் மாலைவரை 66 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.மாநிலத்தில் 15 பேரவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் பெரிய  அசம்பாவதமும் எதுவுமின்றி, அமைதியாக நடந்து  முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள்  9ம் தேதி காலை 8  மணிக்கு 11 மையங்களில் எண்ணப்படுகிறது.

Advertising
Advertising

கட்டுக்கட்டாக பணம் பாஜ தலைவர் சப்ளை

எல்லாப்பூர் தொகுதியில் ேநற்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன் பாஜ வேட்பாளர் சிவராம் ஹெப்பாரின் நெருங்கிய ஆதரவாளர் தொட்டமணி வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜ வேட்பாளருக்கு வாக்களிக்க 100 நபர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை அவர் எண்ணி வினியோகம் செய்வது வீடியோவில் பதிவாகியுள்ளது. பாஜ பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories: