அரசு சுகாதார நிறுவனங்களில் முதியோர் பராமரிப்பு பற்றி பயிற்சி வகுப்பு நடத்தலாம்: ஜனாதிபதி அறிவுரை

புதுடெல்லி:  சுகாதாரத் துறையில் செவிலியர்களின் ஒப்பற்ற சேவையை பாராட்டி வழங்கப்படும் `தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேள் விருது’ வழங்கும் விழா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் 36 செவிலியர்களுக்கு விருது வழங்கிய பின்னர் ஜனாதிபதி ராம்நாத் பேசியதாவது:கேரளா முழுவதும் நிபா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த போது, தன்னுடைய எல்லையற்ற தியாகத்தினால் தானும் நிபா வைரசால் பாதிக்கப்பட்ட போதும், மக்கள் பணி ஆற்றிய கேரள செவிலி லினி புதுச்சேரியின் சேவையை பாராட்டி அவருக்கு இந்த விருது இறப்புக்கு பின்னர்  வழங்கப்படுகிறது.

Advertising
Advertising

தற்போதைய உலகில் பராமரிப்புக்கும், பரிவு காட்டுவதற்குமான தேவை அதிகரித்து வருகிறது. செவிலியர்கள் சேவையின் அடையாளமாக விளங்குகின்றனர். ஆயுஷ்மான் பாரத் திட்டத்திலும் செவிலியர்களால் சிறந்த பணியாற்ற முடியும். இந்தியாவை பொருத்தமட்டில், வீடுகளிலேயே முதியோர்கள் பராமரிக்கப்படுகின்றனர். ஆனால் மாறிவரும் கால சூழ்நிலைக்கேற்ப, வாழ்க்கை நடைமுறையில் முதியோர் பராமரிப்பாளர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதியோர்களை பராமரிப்பதற்கான முறையான பயிற்சி தேவையாகும். நமது அரசு ஆரம்ப சுகாதார நிறுவனங்கள் முதியோர் பராமரிப்பார்களுக்கு இதற்கான குறுகிய கால பயிற்சி அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றார்.

Related Stories: