ஊழல் செய்த 222 அதிகாரிகளுக்கு முன்கூட்டியே ஓய்வு

புதுடெல்லி: ஊழல் செய்த மத்திய அரசு ஊழியர்கள் தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் நேற்று மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திரா சிங் அளித்த பதிலில் கூறியதாவது: கடந்த 2014ம் ஆண்டு ஜூலை முதல் கடந்த அக்டோபர் மாதம் வரையிலான 5 ஆண்டுகளில் மட்டும் முறைகேட்டில் ஈடுபட்ட 222 மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே பணியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு துறை மற்றும் அமைச்சகங்களை சேர்ந்த 96 குரூப் ஏ அதிகாரிகளும், 126 குரூப் பி அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். போதுமான பணித்திறமையில்லாத, நேர்மையற்ற நடத்தை உள்ள அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய சட்டத்தில் இடம் உள்ளது.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertising
Advertising

Related Stories: