தாய்லாந்து டயர்களுக்கு பொருள் குவிப்பு வரி

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து மலிவு விலையில் ரேடியல் டயர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால், வாகன விற்பனை சரிவால் பாதிக்கப்பட்டு வரும் உள்நாட்டு டயர் தொழிற்சாலைகள், நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக தாய்லாந்தில் இருந்து சந்தை விற்பதை விட குறைந்த விலையில் டயர்கள் இறக்குமதி செய்வதை தடுக்க வேண்டும் என வாகன டயர் உற்பத்தியாளர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.இதுகுறித்து ஆய்வு செய்த வர்த்தக அமைச்சகத்தின் புலனாய்வு அமைப்பான வர்த்தக குறைதீர்வு இயக்குநரகம், மலிவு டயர்கள் இறக்குமதிக்கான முகாந்திரங்கள் இருப்பதாக உறுதி செய்துள்ளது. 2018 ஜூன் முதல் 15 மாதங்களில் இறக்குமதி விவரங்களை ஒப்பிட்டு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் தாய்லாந்து டயர்கள் மீது பொருள் குவிப்பு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Thailand , Thailand tires, Material ,accumulation, tax
× RELATED காற்று மாசுவை கட்டுப்படுத்த டயர்களை எரிக்க வேண்டாம்