ஐஎஸ்எல் கால்பந்து சென்னை அணிக்கு புதிய பயிற்சியாளர்

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எப்சி அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்த ஜான் கிரிகோரி விலகினார். அதனால் அயர்லாந்தைச் சேர்ந்த  ஸ்காட்லாந்துகாரரான  ஒவென் கொலம்பா ெகாய்லே  தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்காட்லாந்தில் பிறந்த ஓவென்(53), அயர்லாந்து தேசிய அணிக்காக விளையாடி உள்ளார். அதுமட்டுமல்ல இங்கிலாந்து, ஸ்காட்காலந்து கால்பந்து கிளப்களுக்காக 2007ம் ஆண்டு வரை விளையாடி உள்ளார். அதன் பிறகு பயிற்சியாளரானார். ஸ்காட்லாந்தில் உள்ள  ரோஸ் கவுன்டி கால்பந்து கிளப் பயிற்சியாளராக இருந்த ஒவென் இப்போது சென்னையின் எப்சி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து சொதப்பி வரும் சென்னை அணியை புதிய பயிற்சியாளர் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வரா என்பது இனி வரும் ஆட்டங்களில் தெரிய வரும்.இன்று ஆட்டம் இல்லை: புதிய பயிற்சியாளரின் மேற்பார்வையில்  சென்னை அணி இன்று ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்கொள்ள இருந்தது. ஆனால் ஜார்கண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் இன்று நடைபெற இருந்த போட்டி டிச.9ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>