×

டிசம்பர் 9ம் தேதி முதல் ரஞ்சிக் கோப்பை முதல் போட்டியில் தமிழ்நாடு-கர்நாடகா மோதல்

சென்னை: ரஞ்சிக் கோப்பை டெஸ்ட் போட்டி  டிச.9ம் தேத தொடங்குகிறது.  திண்டுக்கல்லில் நடைபெற உள்ள முதல் போட்டியில் விஜய்சங்கர் தலைமையிலான தமிழ்நாடு அணி கர்நாடகா அணியை எதிர்த்து விளையாடுகிறது.உள்ளூர் ேபாட்டிகளான விஜய் ஹசாரே ஒருநாள், சையத் முஷ்டாக் அலி டி20 தொடர்களை தொடர்ந்து ரஞ்சிக்கோப்பைக் கான  டெஸ்ட் போட்டிகள் டிச.9ம் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் விதர்பா, தமிழ்நாடு, புதுச்சேரி,  தெலுங்கானா, மேற்கு வங்கம், ரயில்வே, சர்வீசஸ், மும்பை  உட்பட 38 அணிகள் பங்கேற்கின்றன. இதில் எலைட்  ஏ, பி பிரிவுகளில் தலா 8 அணிகளும், எலைட் சி பிரிவில் 12 அணிகளும்,  பிளேட் பிரிவில் 8 அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்றுப் போட்டிகள் 4நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளாகவும்,  வெளியேறும் சுற்றுப்போட்டிகள்5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளாகவும் நடத்தப்படும். லீக் சுற்றுப்போட்டிகள் பிப்.12ம் தேதி வரை நடக்கும். வெற்றிப் பெறும் அணிகளை பொறுத்து அரையிறுதி, இறுதிப்போட்டி நடைபெறும், தேதி முடிவு செய்யப்படும்.

லீக் போட்டிகள் டிச.9ம் தேதி முதல் திண்டுக்கல், வதோதரா, தும்பா, டேராடூன், ஜெய்பூர் உட்பட பல்வேறு நகரங்களில் நடக்கின்றன. இதில்  தமிழ்நாடு  அணி எலைட் பி பிரிவில் உள்ளது. சமீபத்தில் நடந்த விஜய ஹசாரோ, சையத் முஷ்டாக் அலி தொடர்களில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி சிறப்பாகவே விளையாட இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால் இந்த 2 இறுதிப் போட்டிகளிலும் கர்நாடகாவிடம் தோற்றுப்போனது தமிழகம்.எனவே ரஞ்சி தொடருக்கான தமிழக அணிக்கு கேப்டனாக விஜய் சங்கர் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழக அணி ரஞ்சி தொடரின் முதல் போட்டியிலேயே  கர்நாடகா அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி திண்டுக்கல்லில் டிச.9ம் தேதி தொடங்குகிறது.  கர்நாடக அணியின் கேப்டன் மனீஷ் பாண்டே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட உள்ளதால், அந்த அணியின் கேப்டனாக கருண் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு அணி: விஜய் சங்கர் (கேப்டன்) முரளி விஜய், அஸ்வின் ரவிசந்திரன், தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), பாபா அபரஜித், முருகன் அஸ்வின், கே.முகுந்த், என்.ஜெகதீசன், அபினவ் முகுந்த், சாய் கிஷோர், டி.நடராஜன், ஷாருக்கான்,  கே.விக்கேனஷ், மணிமாறன் சி்ததார்த், அபிஷேக் தன்வர்.

நோ பால் இனி 3வது நடுவர் வேலை
கிரிக்கெட் போட்டிகளில்  ‘நோ பால்’ வீசப்படுகிறதா என்பதை களத்தில் உள்ள நடுவர்கள் கவனிக்க வேண்டும். அப்படியில்லாவிட்டால் வீரர்களோ, நடுவர்களோ முறையீடு செய்தால் 3வது நடுவர் பார்த்துச் சொல்வார். ஆனால் இனி ஒவ்வொரு பந்தும் ஒழுங்காக வீசப்படுகிறதா என்பதை 3வது நடுவர்தான் கண்காணிக்க வேண்டும். அவற்றில் ஏதாவது ‘நோ பால்’ வீசப்பட்டால் களத்தில் உள்ள நடுவருக்கு இனி 3வது நடுவர்தான் தெரிவிக்க வேண்டும்.  களத்தில் உள்ள நடுவர் இனி ‘நோ பாலுக்கு’ பொறுப்பு கிடையாது.
இந்த புதிய முறை இன்று நடைபெற உள்ள இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 போட்டியில் அறிமுகமாகிறது. இதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) நேற்று அறிவித்தது.

Tags : Tamil Nadu ,Karnataka ,clash ,match ,Ranji Trophy , Ranjic Cup ,December, Tamil Nadu-Karnataka ,first match
× RELATED பெங்களூருவில் உள்ள ஜெயலலிதா நகைகளை...