இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் இன்று தொடங்குகிறது

ஐதராபாத்: தொடரந்து 2 டி20 தொடர்களை இந்தியாவிடம் இழந்த வெஸ்ட் இண்டீஸ் இந்த தொடைர கைப்பற்றும் முனைப்பில் இன்று களம் காண உள்ளது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி இன்று ஐதராபாத்திலும், 2வது டி20 போட்டி டிச.8ம் தேதியும் திருவனந்தபுரத்திலும், 3வது டி20 போட்டி டிச.11ம் தேதி  மும்பையிலும் நடைபெற உள்ளது. தொடர்ந்து முதல் ஒருநாள் போட்டி சென்னையில் டிச.15ம் தேதியும், 2வது ஒருநாள் விசாகப்பட்டினத்தில் டிச.18ம் தேதியும், 3வது ஒருநாள் போட்டி கட்டாக்கில் டிச.22ம் தேதியும் நடைபெற உள்ளது.வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு ஆண்டு இடைவெளிக்குள் இந்தியாவுடன் 3வது தொடரில் விளையாட உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பரில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவின் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-1  என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.தொடர்ந்து உலக கோப்பை தொடர் முடிந்ததும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்திய அணி வெ.இண்டீஸ் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அப்போது டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைபற்றி வெஸ்ட் இண்டீசை ஒயிட் வாஷ் செய்தது.

தொடர் தோல்விக்கு பழிவாங்க  வெஸ்ட் இண்டீஸ் 2வது முறையாக மீண்டும் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளது. ஆப்கானிஸ்தானுடன் லக்னோவில் விளையாடிய போட்டிகள் வெ.இண்டீசுஸ் அணிக்கு பயிற்சி ஆட்டம் போல் அமைந்துள்ளது கூடுதல் பலம். இந்தியாவை வீழ்த்தி தொடரை கைபற்ற வெஸ்ட் இண்டீஸ் தீவிரமாக உள்ளது. அதற்காக கைரன் பொலார்ட்டு தலைமையில் வெ.இண்டீஸ் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. வீராட் கோஹ்லியை பார்த்து பயப்பட வேண்டாம் என்ற. வெ.இண்டீஸ் பயிற்சியாளர் பில் சிம்ேமான்ஸ் சொல்லும் அளவுக்குதான் இந்திய அணி உள்ளது. தொடர் வெற்றிகளின் உற்சாகத்தில் இருக்கும் இந்திய அணி வரும் போட்டிகளில் வெ.இண்டீஸ் அணியை எளிதில் எதிர்கொள்ளும். ஆனால் எப்போதும் வேகம் காட்டும் என்பதை கணிக்க முடியாத வெ.இண்டீஸ அணியை சாதரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.அதே நேரத்தில் இந்த 2 அணிகளும் கடைசி 5 டி20 போட்டிகளிலும் இந்தியாதான் வெற்றிப் பெற்றள்றது என்பத குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிக்காக 2 அணிகளும் மலலுக்கட்டும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

வெ.இண்டீஸ் அணி: கைரன் பொல்லார்ட்(கேப்டன்), ஃபேபியன் ஆலன், ஷெல்டன் காட்டெரல், சிம்ரன் ஹெட்மயர், ஜாசன் ஹோல்டர், பிராண்டன் கிங், எவில் லீவிஸ், கீமோ பால், காரி பியர்ரே,  நிகோலஸ் பூரண்(விக்கெட் கீப்பர்), தினேஷ் ராம்தின், ஷெர்ஃபேன் ரூதர்போர்–்டு, லெண்டல் சிம்மோன்ஸ், ஹெய்டன் வால்ஷ், கெஸ்ரிக் வில்லியம்ஸ்.

இந்திய அணி: விராட் கோஹ்லி(கேப்டன்), யஜ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், ஷிவம் துபே, ஸ்ரேயாஸ் அய்யர், ரவீந்திர ஜடஜா, குல்தீப் யாதவ்,  புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, மணீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), லோகேஷ் ராகுல்,  சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), ரோகித் சர்மா, வாஷிங்டன் சுந்தர்.

சஞ்சுவா? ரிஷபா?
இன்று நடைபெறும் டி20 போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக நல்ல ஆட்டத்திறனில் இருக்கும் சஞ்சு சாம்சனா, தொடர்ந்து சொதப்பும் ரிஷப் பண்டா என்ற கேள்விக்கு நேற்று விடை கிடைத்து விட்டது.  ஐதராபாத்தில் நேற்று பேசிய கேப்டன் கோஹ்லி, ‘ ரிஷபின் திறமையை நம்புகிறோம். அவருக்கு போதுமான வாய்ப்பையும், ஆதரவையும் தர வேண்டும். ரிஷப் சரியாக விளையாடாத போது அரங்கில் இருக்கும் ரசிகர்கள் டோனி பெயரை உச்சரிப்பதை தவிர்க்க வேண்டும்’  என்று கூறினார். அதனால் இன்று யார் விக்கெட் கீப்பர் என்று தெரிந்து விட்டது.  வங்க தேசத்துக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைத்தது. ஆனால் ஒரு போட்டியில் கூட ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.  வாய்ப்பு தராமலேயே அணியில் இருந்து வெளியேற்றப்பட்டது விமர்சனதுக்கு உள்ளானது. அதனால் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் இந்த முறையும் வாய்ப்பு கிடைப்பது அதிசயம்தான்.

மொத்த ஓவரையும் வீசுவாரா வாஷிங்டன்
இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ஒரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர். சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் தமிழகம் இறுதிப்போட்டியில் நுழைய காரணமானவர். ஆல் ரவுண்டராக ஜொலிக்கும் சுந்தருக்கு இன்றைய ேபாட்டியில் வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் பந்து வீச்சாளருக்கு அளிக்கும் 4 ஓவர்களும் சுந்தருக்கு இன்றுதரப்படுமா என்பது சந்தேகம்தான். காரணம்  ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் விளையாடும் சுந்தருக்கு இதுவரை 4 ஓவர்களையும் வீச கேப்டன் கோஹ்லி வாய்ப்பளித்ததில்லை. அதேபோல்  இந்திய அணியிலும்  சுந்தருக்கு 4 ஓவர்களை வீச கேப்டன் கோஹ்லி வாய்ப்பளிப்பதில்லை. எனவே சுந்தருக்கு இன்று ஆடும் அணியில் வாய்ப்பு கிடைத்தாலும்,  4 ஓவர்களும் வீச வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக் குறிதான். ஆனால் வங்க தேச தொடரில் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா மட்டும் சுந்தருக்கு 4 ஓவர்களும் வீச வாய்ப்பளித்தார்.


Tags : India-West Indies T20 , India-West Indies, T20 ,starts ,today
× RELATED வெப் சீரிஸில் நடிக்கும் செய்தி வாசிப்பாளர்