மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டம்

டெல்லி: மருமக்களும் இனிமேல் தங்களது மாமனார் அல்லது மாமியாரை பராமரிப்பது கட்டாயம் என்ற சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. வயதான பெற்றோரை பராமரிப்பது பிள்ளைகளின் கட்டாய கடமை என்கிற சட்டத்தின் கீழ் பெற்றோருக்கு அதிகபட்சமாக மாதம் 10 ஆயிரம் ரூபாய் மாதாந்திர பராமரிப்புச் செலவு வழங்க வேண்டும். இதைச் செய்யத் தவறுபவர்களுக்கு 3 மாதம் வரை சிறைத் தண்டனை வழங்க ஏற்கனவே சட்டம் உள்ளது.

தற்போது, இந்தச் சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மருமக்கள், தத்துப் பெற்றோர், தத்துப் பிள்ளைகள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைகளும் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ளனர். அதைப் போன்று அதிகபட்ச பராமரிப்புத் தொகையை 10 ஆயிரம் ரூபாயில் இருந்து உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கான சிறைத்தண்டனை 6 மாதமாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த சட்டத்திருத்த மசோதா நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: