பிட்ஸ்

நன்றி குங்குமம் முத்தாரம்

கோழிமுட்டையின் வெள்ளைக் கரு விற்கு ஆங்கிலத்தில் ‘க்ளேர்’ (Glair) என்று பெயர். இது ‘க்ளாரஸ்’ (Glaurus) என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து வந்ததாகும். லத்தீன் மொழியில் ‘க்ளாரஸ்’ என்றால் மிகவும் தெளிவானது என்று பொருள். முட்டையின் வெள்ளைக் கரு பார்ப்பதற்கு கண்ணாடிபோல் மிகவும் தெளிவாக இருப்பதால், இப்பெயர் வந்ததாம்!

ஜப்பானில் சர்க்கரை குறைவு

உலகிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவாக  உள்ள நாடு ஜப்பான்தான். இங்கு மக்கள்தொகையில் மூன்று சதவீதத் தினரே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ‘ஜப்பானியர்கள் மீன் உணவை அதிகமாகச் சாப்பிடுவதுதான் இதற்கு முக்கிய காரணம்’ என்கிறது ஆராய்ச்சி.

உலகின் முதல் உயில்

உலகிலேயே உயில் எழுதும் வழக்கம் முதன்முதலில் கி.பி. 1102ம் ஆண்டு சிசிலி நாட்டில் ஆரம்பமானது. அப்போது சிசிலி நாட்டை ஆண்டு வந்த மன்னர் ரோஜர், தன் சொத்துக்களை உயிலாக எழுதிப் பதிவு செய்தார். இதற்குப் பின்னர்தான் உயில் எழுதி வைக்கும் முறை உலகில் பிற நாடுகளுக்குப் பரவியது.

என்னிடம் கேள்

ஸ்வீடன் நாட்டிலுள்ள சில நகரங்களின் பெயர்கள் விநோதமாக உள்ளன. அங்குள்ள ஒரு எழில்மிகு நகரத்திற்கு ‘ஆஸ்க்மி’ என்று பெயர். ‘என்னிடம் கேள்’ என்பது விநோதமான பெயர்தானே?

கணக்கு கற்பது பாவம்

14ம் நூற்றாண்டு வரை கணக்கு கற்பது பாவம் என்று இங்கிலாந்தில் கருதப் பட்டது. பில்லி-சூனியம் போல இங்கிலாந்து மக்கள் கணக்கை வெறுத்தனர். விஞ்ஞானியாகத் திகழ்ந்த சர் ஐசக் நியூட்டன் அப்போது கணக்கை வெளிப்படையாகக் கற்க முடி யாமல் வீட்டிலேயே மிகவும் ரகசியமாகக் கற்று வந்தார்.

அக்காலத்தில் கணக்குப் பாடம் கல்லூரிகளில் அறவே கிடையாது. 18ம் நூற்றாண்டில்தான் ‘அறிவியலுக்கு கணிதமே அடிப்படை’ என்று உணரப்பட்டது. கணித விஞ்ஞானத்தின் அபரிமிதமான வளர்ச்சியால்தான் நவீன கம்ப்யூட்டர் தற்போது எல்லாத் துறையிலும் முதன்மையாகத் திகழ்கிறது.

எழில்மிகு மடிப்பு விசிறி

மடிக்கக்கூடிய எழில்மிகு விசிறிகளின் தாயகம் சீனாதான். உலகிலேயே முதன் முதலில் மடிக்கக்கூடிய கை விசிறி சீனாவில் ஜியாங்சு என்ற கிராமத்தில் தயாரிக்கப் பட்டது.

இது ஆரம்பத்தில் பனை ஓலைகளால் உருவாக்கப்பட்டது.பிறகு மூங்கில்களை லேசாக வாகாக மாற்றியமைத்து பயன்படுத்தினர். 19ம் நூற்றாண்டில் கை விசிறிகளில் படங்கள் இடம் பெற்றன. பல வண்ணங் களில் இயற்கைக் காட்சிகள்தீட்டப்பட்டன. இந்த மடிப்பு விசிறிகள் தற்போது சீனாவிலி ருந்து எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகின்றன.

ஆர்.ராதிகா

Related Stories:

>