சீனாவின் பொக்கிஷம்!

நன்றி குங்குமம் முத்தாரம்

சீனாவில் ஜியாங்சு மாகாணத்தில் உள்ளது டியான்குவான் ஏரி. சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரி இது. தண்ணீருக்குள் வீற்றிருக்கும் நூற்றுக்கணக்கான மரங்கள் தனி அழகு. அதன் வண்ணமிகு இலைகள் இலையுதிர்காலத்தில் உதிர்ந்து ஏரியை இன்னும் அழகாக்குகின்றன.  இந்த ஏரியில் படகுப் பயணம் செய்வதற்காகவே இங்கே வருகைபுரிபவர்கள் இருக்கிறார்கள்.

பனி மூட்டத்துக்கு நடுவிலும், இலையுதிர்காலத்திலும் நம் மனதைக் கொள்ளையடிக்கிறது டியான்குவான். கழுகுப் பார்வையில் அதிகமாக புகைப்படமாக்கப்பட்ட ஏரிகளில் இதுவும் ஒன்று. சீனாவின் பொக்கிஷம் என்றும் அழைக்கப்படுகிறது

Related Stories:

>