விநோத இறுதிச்சடங்கு

நன்றி குங்குமம் முத்தாரம்

பொதுவாக மற்றவர்களின் இறுதிச்சடங்கிற்குத்தான் செல்வோம். ஆனால், இது கொஞ்சம் வித்தியாசமானது. ஆம்; யாருக்கு இறுதிச்சடங்கு செய்யப்படுகிறதோ அவர்தான் அங்கே செல்ல வேண்டும்.இந்த விநோத இறுதிச்சடங்கு தென்கொரியாவில் வேகமாக பிரபலமாகி வருகிறது. இந்த இலவச சேவையை 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயன்படுத்தியுள்ளனர்.

இறுதிச்சடங்கில் கலந்துகொள்பவர் தங்களின் கடைசி ஆசை மற்றும் உயிலை எழுதி விட்டு சவப்பெட்டிக்குள் பிணத்தைப் போல படுத்துக்கொள்ள வேண்டும். பத்து நிமிடம் சவப்பெட்டியில் இருளுக்குள்ளேயே இருக்க வேண்டும்.பிறகு வெளியே வரவேண்டும். இந்த இறுதிச்சடங்கில் இளைஞர்கள்தான் அதிகமாக கலந்துகொள்கிறார்கள். வாழ்க்கை, மனிதர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதைக் கற்றுக்கொடுக்கவே இந்தச் சடங்கு

Related Stories: