ஐஐடி மாணவி மரணம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: பாத்திமா தந்தை புகார்!

சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளதாக மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் கூறியுள்ளார். டெல்லியில் பிரதமரை சந்தித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது மகளுக்கு நடந்தது போல் இனி யாருக்கும் நடக்கக் கூடாது என்று பிரதமரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார். தனது மகள் மரணத்திற்கு காரணமானவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார். சிபிஐ விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் கூறியுள்ளதாக தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து முறையிட்டதாக பாத்திமாவின் தந்தை கூறியுள்ளார். சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவிலை என புகார் தெரிவித்தார். தனது மகள் தொடர்பான ஆதாரங்களை கோட்டூர்புரம் போலீஸ் மறைந்துவிட்டதாக அப்துல் லத்தீப் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், பாத்திமா தற்கொலை வழக்கை திசைதிருப்பியது கோட்டூர்புரம் காவல்நிலையம் தான் என கண்டனம் தெரிவித்தார். தனது மகள் இறந்து ஒரு 4 நாட்களுக்குள் அனைத்து ஆதாரங்களையும் மறைத்து விட்டனர். கொட்டுப்புறம் காவல்நிலைய அதிகாரிகளும், ஐ.ஐ.டி நிர்வாகமும் சேர்ந்து இதனை செய்துள்ளதாக குற்றம் சாட்டினார். இதனால் தான் இந்த விவகாரம் இந்த அளவுக்கு வந்துள்ளது என தெரிவித்தார். மேலும், தனது மகள் மரணம் தொடர்பாக முதல்வர்,டிஜிபி ஆகியோரை சந்தித்து விட்டேன் என்றும், சட்டப்படி அனைத்தும் நாடாகும் என அவர்கள் தெரிவித்திருந்ததாக கூறினார். இந்த நிலையில், இன்று மீண்டும் சென்னைக்கு சென்று, நாளை அதிகாரிகளை சந்தித்து மீண்டும் கோரிக்கை வைக்க உள்ளதாக தெரிவித்தார். எனக்கு, எனது மகள் எப்படி இறந்தார் என்பது தெரிய வேண்டும் என அவர் கூறினார். குற்றவாளியை கண்டுபிடித்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Stories: