கிடப்பில் போடப்பட்ட நாகை-மைசூர் நெடுஞ்சாலை பணியால் தொடர் விபத்து: அதிகாரிகள் அலட்சியம்

நீடாமங்கலம்: நாகை-மைசூர் தேசிய நெடுஞ்சாலை நீடாமங்கலம், தஞ்சை,திருச்சி வழியாக செல்கிறது. இந்த சாவையில் தஞ்சாவூரிலிருந்து நாகைவரை நான்குவழி சாலை திட்டத்தில் தனியார் கம்பனி ஒப்பந்த அடிப்படையில் பணிகளை தொங்கி நடைபெற்று வந்தது. மத்திய மோடி அரசு வந்தபிறகு ஜி.எஸ்.டி உள்ளிட்ட பல்வேறு வரிகள் உயர்த்தப்பட்டதால் நான்கு வழி சாலை பணி நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுவரை மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்ததா? இல்லையா? என மர்மமாக உள்ளது. இந்த சாலையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் பல்வேறு வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இருருசக்கர வாகனம் மற்றும் பேருந்து கார்களில் திருவாரூர், நாகை, காரைக்கால், வேதாரண்யம் பகுதிகளில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு இரவு நேரங்களில் வாகனங்களில் வருகின்றனர். இந்நிலையில் நாகை - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நீடாமங்கலம் அருகில் உள்ள கோவில்வெண்ணி- பல்லவராயன்பேட்டை என்ற இடத்தில் தஞ்சையிலிருந்து போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை அந்த இடத்தில் இரண்டு சாலைகள் பணி நிறுத்தப்பட்டு, இரு வழிசாலையாக பிரிகிறது.

அப்போது இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் நான்குவழி சாலை நேராக செல்கிறது என நினைத்து நேராக வாகனங்களை ஓட்டும் போது எதிரே உள்ள வாய்க்காளில் விழுந்து தொடர் விபத்துகள் ஏற்படுகிறது.கடந்த 5 மாதங்களுக்கு முன் மோட்டார் பைக்கில் வந்தவர் சாலை நேராக செல்கிறது என ஊட்டி எதிரே உள்ள மதகு கட்டையில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன் கார் ஒன்று நேராக வந்து எதிரே உள்ள மதகு கட்டையில் மோதி கார் கவிழ்ந்து 5 பேர் படுகாயமடைந்தனர்.எனவே இது பொன்ற விபத்து நடைபெராமல் இருக்கவும், மிகப்பெரிய விபத்து நடைபெறும் முன் நான்கு வழிசாலை வந்து இரு வழிசாலையாக பிரியும் இடத்தில் வாகன ஓட்டிகள் கவனத்திற்காக தடுப்பு சுவர் அல்லது பேரிகார்டு போன்ற அடையாளத்தை தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் அல்லது நீடாமங்கலம் காவல் துறையினர் வைத்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: