சென்னை: மெரினா கடற்கரையை 6 மாதத்திற்குள் உலக தரத்திற்கு மாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெரினா கடற்கரை பகுதியில் உள்ள மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்தவும், மீன் கடைகளை ஒழுங்குபடுத்தவும் மேலும் நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிடக்கோரியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழங்கானது உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மெரினா கடற்கரையில் தற்போது வரை 1486 கடைகளுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளதாகவும், லூப் சாலை பகுதியில் இரண்டு ஏக்கரில் மீன் சந்தை கட்ட இருப்பதாகவும், பின்னர் தற்போது கடற்கரை பகுதியில் உள்ள கடைகள் மீன் சந்தைக்கு மாற்றப்படும் எனவும் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.