நெல்லை கரையிருப்பு பகுதியில் தொடர் மழையால் 4 வீடுகள் இடிந்து சேதம்

நெல்லை: நெல்லையில் பெய்த தொடர்மழையால் 4 குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர்தப்பினர்.

நெல்லை அருகே கரையிருப்பு ஆர்எஸ்ஏ நகரில் பார்வதி(65), கணபதி(63), பண்டாரம்(70), ஜெகநாதன்(58) ஆகியோர் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். நெல்லையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் வீடுகள் வலுவிழந்து சேதமடைந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி, வீட்டில் வசித்தவர்கள் அருகிலுள்ள மகன், மகள் உள்ளிட்ட உறவினர்கள் வீடுகளில் சென்று தஞ்சம் அடைந்தனர். மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் உடமைகளையும் எடுத்து சென்றுவிட்டனர்.

இந்நிலையில் மழையால் வலுவிழுந்து காணப்பட்ட 4 பேரின் குடிசை வீடுகளும் நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஒரு வீடு முழுமையாகவும், மற்ற 3 வீடுகள் பகுதி அளவிலும் சேதமானது. வீட்டில் வசித்தவர்கள் ஏற்கனவே பாதுகாப்பு கருதி வேறு இடத்தில் தஞ்சை புகுந்ததால் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தகவல் அறிந்து தச்சநல்லூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் மழையால் சேதம் அடைந்த வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Stories: