தெலுங்கானாவை தொடர்ந்து உ.பி.,யிலும் பலாத்கார பெண் எரிப்பு: பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை

லக்னோ: உத்திரபிரதேசம் மாநிலம் உன்னாவ் நகரில் கடந்த ஆண்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் தற்போது தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் தெலுங்கானாவில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வாரம் அதே போன்தொரு சம்பவம் உ.பி.,யிலும் நடந்துள்ளது. தெலங்கானாவின் சம்ஷாபாத்தை சேர்ந்த கால்நடை பெண் மருத்துவரை கடந்த 27ம் தேதி லாரி டிரைவர் மற்றும் கிளீனர்கள் நான்கு பேர் இணைந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக்கொலை செய்தனர். அப்பெண்ணின் வாயில் கட்டாயப்படுத்தி விஸ்கியை ஊற்றி, அவரை மயக்கமடையச் செய்து, பலாத்காரம் செய்து, பின் கழுத்தை நெறித்து கொலை செய்து எரித்துள்ளனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் 4 பேருக்கும் மிக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டதுடன், போராட்டமாகவும் வெடித்துள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தின் உன்னாவோ மாவட்டத்தில் 23 வயது இளம் பெண்ணை கடந்த மார்ச் மாதம் 2 பேர் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக நீதிமனறத்தில் வழக்கு தொடரப்பட்டு, இது தொடர்பாக விசாரணை நடைபெறு வருகிறது.  இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக இன்று காலை நீதிமன்றத்துக்கு புறப்பட்டு சென்ற போது, நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளார். 60 முதல் 70 சதவீதம் தீக்காயங்களுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தற்போது கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பலாத்கார குற்றவாளி ஒருவர் உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து அப்பெண்ணை தீவைத்து எரித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். பலாத்கார குற்றவாளியான மேலும் 2 பேர் தலைமறைவாகி உள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

Related Stories: