×

பொருளாதார சரிவை பாஜக அரசு தவறாக மதிப்பிட்டுள்ளது: பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்துவிட்டது... ப.சிதம்பரம் பேட்டி

டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிக்கலில் உள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், ப.சிதம்பரம் சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் முதல் முறையாக டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; ஜம்மு-காஷ்மீரில் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது வேதனை தருகிறது. ஜம்மு-காஷ்மீரில் 75 லட்சம் மக்களின் சுதந்திரம் தடுக்கப்பட்டு உள்ளது. பொருளாதார சிரிவை பாஜக அரசு தவறாக மதிப்பிட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி பின்னடைவு காரணத்தை அரசால் கணிக்க முடியவில்லை. 8 சதவீதத்தில் இருந்த பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்து விட்டது. நடப்பு நிதியாண்டில் 5% வளர்ச்சி அடைந்தாலே பெரிய அதிசயம். பொருளாதாரத்தை நிர்வகிக்க திறனற்ற அரசு என்று ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்தார். பொருளாதார நிலை குறித்து பிரதமர் மோடி அமைதியாகவே இருக்கிறார். வெங்காயம் விலை கிலோ 100-க்கும் அதிகமாக விலை உயர்ந்து விட்டது. நிதியமைச்சர் நிர்மலா தாம் வெங்காயம் சாப்பிவிடுவதில்லை என்று கூறுகிறார். வெங்காய விலை உயர்வில் அரசின் மனநிலையை நிர்மலாவின் பதில் வெளிப்படுத்துகிறது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை ரிசர்வ் வங்கியே படிப்படியாக குறைத்து விட்டது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மக்களின் வறுமை அதிகரித்து விட்டது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை விற்பதில் பெரும் ஊழல் நடப்பதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார். அரசு நிறுவனங்களை விற்று அரசாங்க கஜானா நிரப்பப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.


Tags : government ,BJP ,downturn ,P. Chidambaram , BJP Government, Economic Development, P. Chidambaram
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு