×

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை... நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: வங்கிகளுக்கான குறுகிய காலக்கடன் வட்டி ரெப்போவில் மாற்றம் ஏதுமில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 5 முறை ரிசர்வ் வங்கிக் கூட்டங்களில் வட்டி குறைக்கப்பட்ட நிலையில், இந்த முறை எந்த மாற்றமும் இல்லை என்றும்,  5.15% ஆகவே தொடரும் எனவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யப்படாததால் வீடு, வாகன கடன்வட்டி குறைய வாய்ப்பில்லை.  இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் நிதிக் கொள்கைக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. கடந்த 5 முறை நடைபெற்ற நிதிக் கொள்கைக் கூட்டங்களில் வட்டி குறைக்கப்பட்ட நிலையில், இன்று ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று நிதி கொள்கைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். கடந்த 5 முறையாக நடைபெற்ற கூட்டத்தில் இதுவரை 1.60% ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. மேலும், பொருளாதார வளர்ச்சி ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பின்னடைவு ஏற்பட்டதன் எதிரொலியாக, கடந்த 5 முறையும் வட்டி விகித்ததை குறைத்து குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் ரெப்போ விகிதம் 5.15%-ஆகவும், ரிவர்ஸ் ரெப்போ 4.90%-ஆகவும் தொடரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜி.டி.பி மதிப்பீட்டு இலக்கு 6.1%- லிருந்து 5%-ஆக குறைப்பதாக தெரிவித்துள்ளது. இந்த மதிப்பீட்டு இலைகை மேலும் குறைப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையும்:

2019 - 20ம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்தைவிட குறையும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 6.1 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைந்துள்ளது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதேபோல, நடப்பு நிதியாண்டில் நாட்டின் பணவீக்க விகிதம் ஏற்கனவே மதிப்பிட்டிருந்ததை விட அதிகரிக்கும் எனவும் தகவல் அளித்துள்ளது. 2019 - 20ம் நிதியாண்டில் 3.5% ஆக இருக்கும் என்று கணக்கிடப்பட்டு இருந்த பணவீக்க விகிதம் 3.7% ஆக உயரும் என்று அறிவித்துள்ளது.

Tags : RBI ,country ,announcement , Repo interest rate, no change, economic growth rate, decrease, RBI
× RELATED 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த...