×

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஹவாயில் உள்ள பியர்ல் ஹார்பர் ராணுவ தளம் மூடல்... இந்திய விமானப்படை தளபதி பத்திரமாக மீட்பு

வாஷிங்டன்: துப்பாக்கிச்சூடு காரணமாக அமெரிக்காவின் ஹவாயில் உள்ள பியர்ல் ஹார்பர் ராணுவ தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஹவாய் தீவில் பியர்ல் ஹார்பர் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ளது. இங்குள்ள தெற்கு நுழைவுவாயில் வழியே மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். அவர் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி தன்னிடம் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 3 பேர் காயமடைந்தனர். அதில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அந்நாட்டு நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பின் துப்பாக்கி சூடு நடத்திய நபர் தனது தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.  அவர் கடற்படை சீருடை அணிந்திருந்தார் என கூறப்படுகிறது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து கப்பல் கட்டும் தளம் தற்காலிமாக மூடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்திய விமானப்படை தளபதி மீட்பு
இந்த சம்பவம் நடந்த போது, அந்த கப்பற்கட்டும் தளத்தில், இருந்த இந்திய விமானப்படை தளபதி பதாரியா மற்றும் இந்திய விமானப்படையினர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஹவாயில் கடற்படைதளத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த போது, இந்திய விமானப்படை தளபதி ஆர்கேஎஸ் பதாரியா அங்கு இருந்தார். துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை. தளபதி உள்ளிட்ட அனைவரும் பத்திரமாக உள்ளனர் என இந்திய விமானப்படைஅறிக்கை வெளியிட்டுள்ளது.


Tags : firing ,Pearl Harbor ,US ,military base closure ,Hawaii ,commander ,Indian Air Force ,closure , America, gunfire, Pearl Harbor military base, closure
× RELATED கியூபா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை