திருமண ஆசை காட்டி பாலியல் தொழில் பாக்.கில் இருந்து சீனாவுக்கு 629 இளம்பெண்கள் கடத்தல்: 1 கோடி வரை விற்பனை

லாகூர்: சீனாவில் உள்ள ஆண்களை திருமணம் செய்வதற்காக பாகிஸ்தானில் இருந்து 629 இளம் பெண்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களை தலா ரூ.1 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்து்ள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் இங்கு குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. அதிலும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளதால் திருமணத்துக்கு பெண் கிடைக்காத நிலை சீனாவில் ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் உள்ள இளம்பெண்களை ஏஜென்டுகள் மூலம் விலைக்கு வாங்கி சீனாவுக்கு கடத்தி செல்கின்றனர். குறிப்பாக பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவ குடும்ப பெண்களை ரூ.40 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான விலைக்கு பெற்று திருமணத்திற்காக சீனாவுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

இதற்காக இளம்பெண்களின் பெற்றோரை அணுகும் ஏஜென்டுகள் ` உங்கள் மகளுக்கு நல்ல எதிர்காலம் சீனாவில் காத்திருப்பதாக கூறி’  அவர்களை நம்ப வைக்கின்றனர். அங்கு சென்று திருமணம் செய்யும் பெண்கள் அடிமைகள் போல் நடத்தப்படுகின்றனர்.
சீன மொழி தெரியாததால் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இது தவிர பாகிஸ்தான் பெண்களை திருமணம் செய்து அழைத்து செல்லும் சீனர்கள் அங்கு பெண்களை பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்துகின்றனர். பாகிஸ்தானில் இருந்து கடந்த 2 ஆண்டில் 629 ெபண்கள் சீனாவுக்கு கடத்தப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது.  அவர்கள் எந்த விமான நிலையத்தில் இருந்து அழைத்து சென்றனர். அந்த பெண்களின் தேசிய அடையாள எண், அவர்களது கணவர் பெயர் மற்றும் திருமணம் நடந்த தேதி உள்ளிட்ட விவரங்களும் கிடைத்துள்ளன.


Tags : girls ,China ,pakk.com From Marriage Desire ,adolescents , Marriage, sex, sex trafficking
× RELATED அரசு பள்ளிகளில் பெண் குழந்தைகள் தினம் நாளை கொண்டாட உத்தரவு