வாகன உற்பத்தியை குறைக்க 12 நாள் வரை விடுமுறை அசோக் லேலண்ட் அறிவிப்பு

சென்னை: இந்த மாதத்தில் 2 நாள் முதல் 12 நாட்கள் வரை வேலையில்லா நாட்களாக அசோக் லேலண்ட் அறிவித்துள்ளது.  பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவற்றால் ஆட்டோமொபைல் துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து பல மாதங்களாக விற்பனை சரிவால் வாகன உற்பத்தியாளர்கள், டீலர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். நஷ்டத்தை குறைக்கும் வகையில். மாருதி சுசூகி, ஹீரோ மோட்டார்ஸ், அசோக் லேலண்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கடந்த மாதங்களில் தொழிற்சாலைக்கு வேலையில்லா விடுமுறை நாட்களை அறிவித்தன. இந்த வகையில், நடப்பு மாதத்துக்கான வேலையில்லா நாட்களை அசோக் லேலண்ட் அறிவித்துள்ளது. பங்குச்சந்தையில் இந்த நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையில், ‘வாகன சந்தையில் தேவை குறைந்ததால் உற்பத்தியை குறைக்கும் வகையில் இந்த மாதம் 2 நாள் முதல் 12 நாட்கள் வரை அசோக் லேலண்ட் தொழிற்சாலைகளுக்கு உற்பத்தியில்லா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது’ என கூறியுள்ளது.Tags : holiday ,Ashok Leyland ,announcement ,Holiday Ashok Leyland , Ashok Leyland a
× RELATED பொங்கல் விடுமுறை முடிந்தது...