ஐசிசி டெஸ்ட் தரவரிசை கோஹ்லி மீண்டும் நம்பர் 1: ஸ்மித்தை முந்தினார்

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில், இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகமாகி உள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, வங்கதேச அணிகளுக்கு எதிராக நடந்த தொடர்களில் அபாரமாக செயல்பட்ட இந்திய அணி இதுவரை 360 புள்ளிகளைக் குவித்து தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அணிகளுக்கான ஐசிசி தரவரிசையிலும் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது.ஆஸ்திரேலியா - பாகிஸ்தான், நியூசிலாந்து - இங்கிலாந்து மோதிய டெஸ்ட் தொடர்கள் முடிந்துள்ள நிலையில், ஐசிசி நேற்று வெளியிட்ட பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி ஒரு இடம் முன்னேறி 928 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த தொடரில் கணிசமாக ரன் குவிக்கத் தவறிய ஆஸி. வீரர் ஸ்டீவன் ஸ்மித் (923) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் (877), இந்தியாவின் செதேஷ்வர் புஜாரா (791) 3வது மற்றும் 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்து சதம் மற்றும் முச்சதம் விளாசி அசத்திட ஆஸி. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 5வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இந்தியாவின் செதேஷ்வர் புஜாரா 6வது இடத்துக்கு தள்ளப்பட்டார். தென் ஆப்ரிக்க தொடரில் அபாரமாக விளையாடியதால் டாப் 10ல் நுழைந்த ரோகித் ஷர்மா, வங்கதேசத்துக்கு எதிராக சாதிக்கத் தவறியதால் தற்போது 16வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சு தரவரிசையில், ஆஸி. வேகம் பேட் கம்மின்ஸ் (900) முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் ஜஸ்பிரித் பூம்ரா 5வது இடத்திலும், ஆர்.அஷ்வின், ஷமி 9வது மற்றும் 10வது இடத்திலும் உள்ளனர். ஆல் ரவுண்டர்களுக்கான ரேங்கிங்கில் வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர் முன்னிலை வகிக்கிறார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 2வது இடத்திலும், ஆர்.அஷ்வின் 5வது இடத்திலும் உள்ளனர்.


அணிகள் டாப் 10
ரேங்க்    அணி    புள்ளி
1    இந்தியா    120
2    நியூசிலாந்து    109
3    இங்கிலாந்து    104
4    தென் ஆப்ரிக்கா    102
5    ஆஸ்திரேலியா    102
6    இலங்கை    95
7    வெஸ்ட் இண்டீஸ்    81
8    பாகிஸ்தான்    80
9    வங்கதேசம்    60
10    ஆப்கானிஸ்தான்    49

பேட்டிங் டாப் 10
ரேங்க்    வீரர்    புள்ளி
1    விராத் கோஹ்லி (இந்தியா)    928
2    ஸ்டீவன் ஸ்மித் (ஆஸி.)    923
3    கேன் வில்லியம்சன் (நியூசி.)    877
4    செதேஷ்வர் புஜாரா (இந்தியா)    791
5    டேவிட் வார்னர் (ஆஸி.)    764
6    அஜிங்க்யா ரகானே (இந்தியா)    759
7    ஜோ ரூட் (இங்கிலாந்து)    752
8    மார்னஸ் லாபஸ்ஷேன் (ஆஸி.)    731
9    ஹென்றி நிகோல்ஸ் (நியூசி.)    726
10    திமத் கருணரத்னே (இலங்கை)    723

பந்துவீச்சு டாப் 10
ரேங்க்    வீரர்
1    பேட் கம்மின்ஸ் (ஆஸி.)
2    காகிசோ ரபாடா (தென் ஆப்.)
3    ஜேசன் ஹோல்டர் (வெ.இண்டீஸ்)
4    நீல் வேக்னர் (நியூசி.)
5    ஜஸ்பிரித் பூம்ரா (இந்தியா)
6    வெர்னான் பிலேண்டர் (தென் ஆப்.)
7    ஆண்டர்சன் (இங்கிலாந்து)
8    ஜோஷ் ஹேசல்வுட் (ஆஸி.)
9    ஆர்.அஷ்வின் (இந்தியா)
10    முகமது ஷமி (இந்தியா)

ஆல் ரவுண்டர் டாப் 10
ரேங்க்    வீரர்    புள்ளி

1    ஜேசன் ஹோல்டர் (வெ.இண்டீஸ்)    473
2    ரவீந்திர ஜடேஜா (இந்தியா)    406
3    பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)    381
4    வெர்னான் பிலேண்டர் (தெ.ஆப்.)    315
5    ஆர்.அஷ்வின் (இந்தியா)    308
6    மிட்செல் ஸ்டார்க் (ஆஸி.)    284
7    பேட் கம்மின்ஸ் (ஆஸி.)    278
8    ரோஸ்டன் சேஸ் (வெ.இண்டீஸ்)    238
9    கிராண்ட்ஹோம் (நியூசிலாந்து)    237
10    கிறிஸ் வோக்ஸ் (நியூசிலாந்து)    227
Tags : Kohli ,ICC Test ,Number 1 ,Smith , ICC Test Rankings, Kohli, Number 1, Smith
× RELATED டெஸ்ட், ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி...