×

மாநில அரசு பணிகளுக்கு பொதுத்தேர்வு மாநில சுயாட்சி, சமூகநீதிக்கு எதிரானது : அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை:  பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: மாநில அரசு பணிகளுக்கு தகுதியான பணியாளர்களை தேர்வு செய்ய தேசிய அளவில் பொதுத்தேர்வு நடத்தலாம் என்றும், இதற்காக உருவாக்கப்படும் அமைப்புடன் மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்தத் திட்டம் சமூக நீதிக்கு எதிரானது என்பது மட்டுமின்றி, மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் செயலும் ஆகும்.

மாநில தேர்வு வாரியங்கள் அனைத்தையும் கலைத்து விட்டு பலவிதமான பணிகளுக்கு ஒரே அமைப்பை ஏற்படுத்துவது மிகவும் பிற்போக்கானது. பொதுப்போட்டித் தேர்வை 3 முறை மட்டுமே எழுத முடியும் என்பது மற்றொரு அநீதி ஆகும். எனவே, மாநில அரசு பணிகள் மற்றும் பொதுத்துறை பணிகளுக்கு பொதுப்போட்டித் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

Tags : state government ,election , General election, state government functions , state autonomy,social justice
× RELATED தனி தொகுதிகளில் அருந்ததியருக்கு சமூக நீதி வலியுறுத்தி மாநாடு