மைதானத்துக்குள் காடு!

நன்றி குங்குமம் முத்தாரம்

இந்த உலகில் வேகமாக அழிந்து வருகின்றவற்றில் முக்கியமானது காடு. சமீபத்தில் அமேசான் காடு தீப்பற்றி பெரும் விவாதத்தைக் கிளப்பியது. மரம் நடுதல், காடுகளை உருவாக்குதல் போன்ற விஷயங்கள் முக்கிய பேசுபொருளாக மாறின. இந்நிலையில் கிளாஸ் லிட்மேன் என்ற கலைஞன் ஆஸ்திரியாவில் உள்ள கால்பந்து மைதானத்துக்குள் ஒரு காட்டை வடிவமைத்துள்ளார்.

இது எல்லோரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. 1970-இல் பீன்ட்னெர் என்பவர் படைத்த ஒரு வரைபடம்தான் கிளாஸுக்கு தூண்டுதலாக இருந்திருக்கிறது. மைதானத்துக்குள் இருக்கும் காட்டில் வில்லோ, ஓக், ஆஸ்பன், மேபிள் என 300-க்கும் மேற்பட்ட மரங்கள் இருக்கின்றன. ‘‘உயிரியல் பூங்காவிற்குச் சென்று வன விலங்குகளைப் பார்வையிடுவது போல காட்டையும் நாம் பார்க்க நேரலாம்...’’ என்று எச்சரிக்கும் விதமாக இந்தக் காட்டை உருவாக்கியிருக்கிறார் கிளாஸ்.

Related Stories: