×

வடகொரியாவில் அதிநவீன சொகுசு வசதியுடன் கூடிய சாம்ஜியான் கனவு நகரை திறந்து வைத்தார் அதிபர் கிம் ஜாங் அன்

வடகொரியா: வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் அன் தனது கனவு திட்டங்களில் ஒன்றாக அதிநவீன சொகுசு வசதியுடன் கூடிய சாம்ஜியான் நகரம் திறந்து வைத்தார். அதிபர் கிம் ஜாங் அன் குடும்பத்தினரின் பூர்விகமாக கருதப்படும் பேக்டு மலைக்கு அருகே நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சொகுசு வசதிகளுடன் சாம்ஜியான் நகரம் கட்டப்பட்டுள்ளது. பனிபடர்ந்த எங்கும் வெள்ளை நிறமாக காட்சியளிக்கும் நகரத்தை வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளார். அந்த நாட்டின் அரசு நாளிதழ் வெளியிட்ட செய்தியில், கிம் ஜாங் அன் ரிப்பன் வெட்டி சம்ஜியோன் நகரத்தை திறந்து வைக்கும் காட்சி மற்றும் மக்களின் கொண்டாட்டங்கள் நிறைந்த பல புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள், நட்சத்திர ஓட்டல்கள், கலாச்சர மையம் மற்றும் உயர்தர மருத்துவமனை ஆகியவற்றினை கொண்ட இந்த நகரில் சுமார் 4 ஆயிரம் குடும்பங்கள் வசிக்க முடியும் என கூறப்படுகிறது. தொடர்ந்து, வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரத்தில் சுயசார்புடன் இருக்கும் வகையில் இந்நகரத்தில் தொழிற்சாலைகளுக்கான இடவசதியும்  ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, கட்டுமான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் எதிர்பார்த்ததை விட தாமதமாகவே இந்த நகரம் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Kim Jong Un ,North Korea ,Luxury Dream City ,hotel , North Korea, Luxury Facilities, Changjian, President Kim Jong Un
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...