170 கோடி நிதி பெற்ற விவகாரம்: காங்கிரசுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

புதுடெல்லி: கட்டுமான நிறுவனத்திடம் இருந்து ரூ.170 கோடி நிதி பெற்ற புகாரின் பேரில், காங்கிரசுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  டெல்லி, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, போலி ரசீதுகள் கொடுத்தும், ஹவாலா முறையிலும் ரூ.3,300 கோடி அளவுக்கு மோசடியாக பணப் பரிமாற்றம் நடந்ததை  வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர்.  இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள கட்டுமானம் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனத்திடம் இருந்து காங்கிரஸ் முறைகேடாக ரூ.170 கோடியை பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.   இது தொடர்பாக  விளக்கம் கேட்டு, அக்கட்சிக்கு வருமான வரித்துறை நேற்று நோட்டீஸ் அனுப்பியது. அரசியல் வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: