உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் வழங்கவேண்டும்: பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

மேட்டுப்பாளையம்:  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் காம்பவுண்ட் சுவர் இடிந்து 17 பேர் பலியான இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  மதில் சுவரை கோட்டைபோல் கட்டியிருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த சுவர், தரமற்றதாக கட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. விபத்து ஏற்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்னர்கூட மழைநீர் வீடுகளுக்குள் நுழைவதாக தெரிவித்துள்ளனர். ஆனாலும், சம்பந்தப்பட்ட நில உரிமையாளர் இதற்கு செவி சாய்க்காமல் இருந்துள்ளார். அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. சுவர் இடிந்து விழுந்ததற்கு முழு பொறுப்பையும் அரசு அதிகாரிகளும், நில உரிமையாளரும் ஏற்க வேண்டும். அரசு சார்பில் அளிக்கப்பட்ட இழப்பீட்டு தொகை போதாது. இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்கவேண்டும். அப்பகுதியில் மீதம் தொங்கிக்கொண்டுள்ள சுற்றுச்சுவரை முழுவதுமாக அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.

Related Stories: