துளித் துளியாய்

* காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பூம்ரா, மும்பை கிரிக்கெட் சங்க வளாகத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்றுனர் ரஜினிகாந்த் சிவஞானம் மேற்பார்வையில் நேற்று உடற்பயிற்சியை தொடங்கி உள்ளார். நியூசிலாந்து சுற்றுப்பயணத்துக்கு முன்பாக அவர் முழு உடல்தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்திய ஆண்கள் டேபிள் டென்னிஸ் அணி உலக தரவரிசையில் முதல் முறையாக 8வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

* காத்மாண்டுவில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டித் தொடரின் தடகள பிரிவில் இந்திய அணி 3 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்றுள்ளது.

* தெற்காசிய விளையாட்டு போட்டித் தொடரின் மகளிர் கால்பந்து பிரிவில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவுகள் அணியை எளிதாக வீழ்த்தியது.

* ஒவ்வொரு டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி குறைந்தபட்சம் ஒரு பகல்/இரவு போட்டியில் விளையாட வேண்டும் என விரும்புவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

* டேவிஸ் கோப்பை தொடரின் இரட்டையர் பிரிவில் தனது 44வது வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்த மூத்த வீரர் லியாண்டர் பயஸ், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

* இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டி20 போட்டி ஐதராபாத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

Related Stories:

>